கனவிலே கல்யாணம்...
எனக்கல்ல...
அவளுக்கு...
மணப்பெண் தோழனுக்கு அழைப்பு வந்தது...
வர பிடிக்கவில்லை!!!
காரணம் தெரியவில்லை...
கூறினேன் முடியாது என்று.
கல்யாணம் வேண்டாம் என்றால்.
மாப்பிள்ளை பாவம் என்றேன்.
மறு தேதி வரட்டும் என்றால்.
மீண்டும் முடியாது என்றேன்...
அழைப்பு துண்டித்தது...
அவள் குரல் கேட்டது அன்று தான் கடைசி...
மறு தேதிக்கு மறுத்தது என் மனம்.
கல்யாண நாள் வந்ததது...
பழனி சென்றேன்...
கண்டேன் அவளை மணப்பெண் கோலத்தில்...
அத்தனை அழகு!!!
காணாது நின்றாள்...
பேசாது பேசினால்...
மணப்பெண் தோழனாக நின்றேன் சிறு நிமிடங்கள்...
அவள் குரல்
இன்னும் ஒலிக்கவில்லை...
விடை பெற்றால் ஒருபுறமாக...
வீடு திரும்பினேன் மறுபுறமாக...
காத்திருக்கிறேன்!!!
இன்னும் அவளின் குரலை கேட்க !!!!