Thursday, July 28, 2016

புத்தாடைகளுக்கு தீபாவளி !!!

புத்தாடைகளுக்கு
தீபாவளி...
நீ
அதை
அணியும்
பொழுது!!!

Wednesday, July 27, 2016

புத்தாடைகளின் நகை!!!

உன் புத்தாடைகளின்
நகை தான்
இன்னும் பொலிவு சேர்கின்றதோ!!!
நகைத்தலின்
காரணம் என்ன???
யோசித்தேன்!!!
அவை உனை வந்து
சேர்ந்ததினாலோ!!!

Monday, July 4, 2016

காணாமல் போன தூக்கம்

வாரா தூக்கத்தை உணர்ந்தேன்,
பல வருடங்களுக்கு பிறகு...
நீ
இரண்டு மைல்கள் தூரம்
இல்லாததினாலோ?

Sunday, July 3, 2016

இருந்தும் இல்லாமல்

நீ
இங்கு
இல்லை!!!
நானும்
இங்கு
இல்லை!!!

கனவு வரும் என்று காத்திருந்தேன்

நாம் நினைத்தது போல் கனவு வந்தால்?
கனவின் மதிப்பு என்ன ஆவது!!!
இன்னும் காத்திருப்பேன்...
இரண்டு நாட்கள் மட்டும்...

உன்னை பார்க்க ஆசை

உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசை...
இரண்டு மைல்கள் தூரத்திலும் இல்லை!
இருநூறு மைல்கள் தூரத்திலும் இல்லை!!!
கனவிலாவது பார்ப்பேனா?
உறங்குகிறேன்...
உன் நினைவால்....

Saturday, July 2, 2016

தவம் செய்த மழை துளி

என்ன தவம் செய்தனவோ
அந்த ஒரு சில மழை துளிகள்!!!
உனை நனைத்ததற்காக!!!